1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 13 டிசம்பர் 2025 (16:40 IST)

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?
நடிகை ஸ்ரீலீலா, நடிகர் அஜித்குமார் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 
 
மலேசியாவில் நடந்த இந்த சந்திப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் உடன் இருந்ததால், இது அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 64' க்கான ஒத்திகையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படமான 'ஏகே 64' க்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அஜித்தின் கார் பந்தயங்கள் முடிந்த பிறகு, இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், மலேசியாவில் அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. 
 
இந் சந்திப்பில் ஆதிக் ரவிச்சந்திரனும் உடனிருந்ததால், ஸ்ரீலீலா 'ஏகே 64' படத்தில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
Edited by Mahendran