செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (23:07 IST)

இளையராஜா பயோபிக் 2 பாகமா?

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
இதுதவிர பல புத்தகங்கள் எழுதியுள்ளார். பல படங்களில் பாடியுள்ளார். 
 
இவரது சாதனைகளை பலரும் பாராட்டி கெளரவித்து வரும் நிலையில், இவரது வாழ்க்கைப் படம்  உருவாகி வருகிறது.
 
சமீபத்தில் தனுஷ், நடிக்க அருண் மாதேஷ்வரன் இளையராஜாவின் வாழ்க்கைப் படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
இப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில், இளையராஜாவின் வாழ்க்கை என்பது கடல் மாதிரி பெரிது என்பதால் இப்படம் 2 பாகங்களாக  உருவாகிறது என தகவல் வெளியாகிறது.
 
மேலும், இப்படத்திற்கு திரைக்கதை கமல் என்ற தகவல் வெளியான நிலையில், தேர்தல் காரணமாக  தற்போது பிஸியாக உள்ளதால், திரைக்கதையை தனுஷே எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும், இப்படத்தில் இளையராஜா பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்து அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்க தொடங்கியது வரை இதில் இடம்பெறும் எனவும் மற்றவை 2 ஆம் பாகத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது