பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே
அந்தக் கால தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் பியு சின்னப்பா. ஆரியமாலா, உத்தமபுத்திரன் போன்ற படங்களை பார்த்தாலே தெரியும். இவர் எப்பேர்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று. நிஜத்திலேயே சண்டை செய்து, இவரே பாடி அந்த படத்தில் நடித்திருப்பார். எம்ஜிஆர் சிவாஜி ஆகியோர் அடிக்கடி பார்க்கக்கூடிய படங்களாகவும் இந்த இரு படங்கள் இருந்தன. ஆனால் குறுகிய வயதிலேயே இவர் இந்த உலகை விட்டு மறைந்தார். சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி பற்றி யாருக்காவது தெரியுமா? அது நானே சொல்கிறேன் என பிரபல கதை ஆசிரியர் கலைஞானம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
நாளை ரஜினியின் பிறந்தநாள் என்பதால் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கலைஞானம் ரஜினியை அவருடைய வீட்டில் நேரில் போய் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல கலைஞானத்தை தன்னுடைய காரிலேயே அழைத்து வந்து வீட்டில் உபசரித்துவிட்டு மீண்டும் அதே காரிலேயே கலைஞானத்தை வீட்டில் போய் விட சொல்லி இருக்கிறார் ரஜினி. இப்படி ரஜினி வீட்டில் எந்த ஒரு நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அங்கு தவறாமல் இருப்பவர் கலைஞானம். இந்த நிலையில் அவர் யாருக்கும் நல்லது செய்யவில்லை ,உதவிகள் செய்ததில்லை என்றெல்லாம் அவரைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றன.
யார் சொன்னது? அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்று? வெளியில் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார் ரஜினி என கலைஞானம் ஒரு சம்பவத்தை கூறினார். 25 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. அது மட்டுமல்ல ஒரு சமயம் பியு சின்னப்பாவின் பேரன் கலைஞானத்தின் வீட்டில் வந்து சந்தித்து இருக்கிறார். அப்போது எங்களுடைய சொத்தை எங்களுக்கே தெரியாமல் என்னுடைய பாட்டி எழுதி வாங்கிவிட்டார். அவருக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம்.
தற்போது என்னுடைய குடும்பத்துடன் சென்னையில் வந்திருக்கிறேன். ஆனால் என்ன செய்வது எங்கே போவது என தெரியவில்லை. பொருளாதார ரீதியாகவும் நான் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என கலைஞானத்திடம் பி யு சின்னப்பாவின் பேரன் கேட்டிருக்கிறார். உடனே கலைஞானத்திற்கு ஞாபகம் வந்தது ரஜினி தான். அவர்தான் என்ன உதவி கேட்டாலும் செய்வாரே. பி யு சின்னப்பா படங்களை அவர் பார்க்காமலா இருந்திருப்பார். அவரைப் பற்றி ரஜினிக்கு தெரியாமலா இருந்திருக்கும். அதனால் ரஜினியிடமே போகச் சொல்லுவோம் என ரஜினியிடமிருந்து நான் உதவி கேட்கிறேன் என கலைஞானம் கூறியிருக்கிறார்.
உடனே பி யு சின்னப்பாவின் பேரன் இப்பொழுது தான் ரஜினி எங்களுக்கு இரண்டு லட்சம் கொடுத்தார் என கூறினாராம். இதைக் கேட்டதும் கலைஞானம் வாயடைத்து போனாராம். அதனால் ஒரு உயர்ந்த குணத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் ரஜினி என கலைஞானம் கூறினார். அவர் தான் ரஜினியை பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அவருடைய படங்களில் ரஜினி நடிக்கவே இல்லை.
அதைப் பற்றியும் ரஜினி வருத்தப்பட்டு இருக்கிறார். ஏனெனில் கலைஞானத்திற்கு சொந்த வீடு என்பதே கிடையாது. ஏன் இவருக்கு நாம் தொடர்ந்து படங்களை கொடுக்கவில்லை? தப்பு பண்ணிவிட்டோமே என்று வருத்தப்பட்டு இருக்கிறார் ரஜினி. அதனால் அரசு கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தர இருந்த நிலையில் வேண்டாம் நானே அவருக்கு வாங்கி கொடுக்கிறேன் என ரஜினிகாந்த் கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்தார்.