திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: சனி, 13 டிசம்பர் 2025 (13:07 IST)

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு
அரசியலில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் படத்திலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார் சரத்குமார். அதுவும் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாபாத்திரங்கள் மக்களிடம் மிகுந்த அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த அளவுக்கு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்த பிறகு அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் சரத்குமார்.
 
அந்த வகையில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடம் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. போர் தொழில் படத்தில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. கடைசியாக வெளியான டியூட் திரைப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. வில்லனாகவும் காமெடியனாகவும் ஒரு டூயல் கேரக்டர் போல அந்த படத்தில் நடித்திருந்தார் சரத்குமார்.
 
ஒரு லெஜெண்ட் நடிகர் இந்த மாதிரி கதை உள்ள படத்தில் எப்படி அவர் நடித்தார் என்ற வகையிலும் விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அப்படித்தான் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று அதற்கு பதில் அளித்து இருந்தார் சரத்குமார். இந்த நிலையில் அடுத்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார்.
விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு
 






























அந்த படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கின்றது. அந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் சரத்குமார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு அப்பா ஸ்தானத்தில் சண்முக பாண்டியனுக்கு இந்த படத்தில் பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார் சரத்குமார். அதைப்போல இந்த படத்தை புரோமோட் செய்யும் போதும் சண்முக பாண்டியனுக்காக தன்னுடைய சப்போர்ட்டை தொடர்ந்து கொடுத்து வருகிறார் சரத்குமார்.
 
ஏனெனில் சரத்குமாரின் ஆரம்பகாலங்களில் அவருக்கு ஒரு வழிகாட்டியாக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். அந்த நன்றியுணர்வுடன் அவருடைய மகனுக்கு தன்னால் முடிந்த உதவிகளை சினிமாவில் செய்து வருகிறார் சரத்குமார். இந்த நிலையில் அவருடைய ஒரு பதிவு சமூக வலைதளங்களில் திடீரென வைரலாகி வருகின்றது. கொம்பு சீவி படத்தை பற்றி தன்னுடைய வலைதள பக்கத்தில் ப்ரொமோட் செய்துள்ளார். அதில் துப்பாக்கிய புடிங்க பாண்டி என ஒரு கேப்ஷனை வெளியிட்டு படத்தைப் பற்றியும் பதிவிட்டு இருக்கிறார். இது ரசிகர்களிடம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.