1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (21:58 IST)

தக்லைஃப் : சிம்புவுடன் ஜெயம் ரவிக்கு பிரச்சனையா??

பல ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம்- கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  தக்லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக துல்கர்சல்மான் விலகினார். அவருக்குப் பதிலாக சிம்பு நடிப்பதாக தகவல் வெளியானது.  நடிகர் ஜெயம்ரவி ஏற்கனவே இப்படத்தில்  ஒப்பந்தமான நிலையில்,  அவரது கால்ஷீட் தேதிகளை வீணாக்கிவிட்டதால் இப்படத்தில் இருந்து விலகினார் என தகவல் வெளியானது.
 
ஆனால், இது உண்மையில்லையாம்.  தற்போது சிம்பு இப்படத்தில் நடிப்பதாக  வெளியான நிலையில், ஜெயம்ரவி இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இருவருக்குள் ஏதாவது பிரச்சனை ஏதும் உள்ளதா என கேள்விகள் எழுந்துள்ளது. அதேபோல் 4  நடிகர்களின் படங்களில் நடித்தால் தனக்கென மார்க்கெட் இருக்காது என்பதாலும் இதிலிருந்து விலகினார் என தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில் ஜெயம்ரவிக்குப் பதிலாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அருண் விஜய் தற்போது வணங்கான் படத்தில் பிஸியாக உள்ளதாலும் இதையடுத்து, மான்கராத்தே பட இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாலும் அவர் இதில் நடிக்கமாட்டார் என கூறப்படுகிறது.