வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (13:15 IST)

ஆல் ஏரியால அண்ணன் கில்லி.. முதல் நாளே வெளுத்து வாங்கிய வசூல்! – கில்லி முதல் நாள் கலெக்‌ஷன்!

Ghilli
விஜய் நடித்த கில்லி திரைப்படம் நேற்று ரீ ரிலீஸ் ஆன நிலையில் மிகப்பெரும் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.



தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து 2004ல் வெளியான படம் கில்லி. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக்கான இந்த படம் ஒக்கடுவை விட அதிகமாக வசூல் செய்து 200 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நேற்று படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. கில்லி படத்திற்கான முன்பதிவு தொடங்கி சில மணி நேரங்களில் 38 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.


இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கில்லி தமிழ்நாடு முழுவதும் ரூ.10 கோடி வசூல் செய்து வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை ரீரிலீஸ் ஆன படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது கில்லி. மேலும் இந்த ஆண்டு வெளியான தமிழ்படங்களில் முதல் நாள் வசூலில் ரூ10 கோடியை தொட்ட இரண்டாவது படமாகவும் கில்லி உள்ளது. 20 ஆண்டுகள் கழித்து வெளியாகியும் வசூலில் சொல்லியடிக்கும் கில்லி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K