அந்த 50 நாள் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டானோ - கண்ணீர் விட்ட ஜானகி அம்மா

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (09:08 IST)

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குறித்தும் அவருடன் பயணித்த நாட்களை குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவின் மூத்த பாடகியும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களை திரையில் பாட அறிமுகப்படுத்தியவருமான ஜானகி அம்மா எஸ்பிபி குறித்து பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் எஸ்பிபி ஒரு குழந்தை சுபாவம் கொண்டவர் என்றும் என்னுடன் ரெக்கார்டிங்கில் இருக்கும் போதெல்லாம் நிறைய குறும்பு செய்துக்கொண்டே இருப்பார் என பல அழகிய தருணங்களை குறித்து பகிர்ந்து மனம் வருந்தியுள்ளார். ஒரு அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான அழகிய பாசத்தை இந்த பேட்டியில் நம்மால் உணர முடிகிறது.

கடைசியாக ஐதராபாத்தில் கச்சேரிக்கு சென்று என் வீட்டிற்குவந்து சாப்பிட்டு என் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு சென்றான். அதன் பிறகு தான் உடல்நிலை சரியில்லாமல் போனது. ஹாஸ்பிடல்ல இருந்த அந்த 50 நாள் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டானோ பாவம்.. கடைசியில் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என கண்ணீர் மல்க கூறினார். ஒரு அம்மாவைத் தவிற இந்த வார்தைகள் யார் மனதில் இருந்தும் வராது அம்மா நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்.


இதில் மேலும் படிக்கவும் :