செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:35 IST)

பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

கடந்த 25 ஆம் தேதி இந்தியாவின் அடையாளமாக இருந்த  பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி உடல்நலக்குறைவால் மறைந்தார்.

அவரது இறப்புக்குப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  குறிப்பாக நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன் எஸ்பிபி மக சரணுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் சில நேற்று விருது வழங்கும் குழுவில் இடம்பெற்றுள்ள கங்கை அமரன் மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு பாரத்  ரத்னா விருது வழங்க நான் குரல் கொடுப்பதாய் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நெல்லூரைச் சேர்ந்த மறைத பாடர்கர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அவரது கலைசேவையைப் பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.