1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (19:04 IST)

அஜித் ஏன் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை: எஸ்பிபி சரண் விளக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவால் திரை உலகத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ள நிலையில் ஒருசிலர் அவர் மரணத்திலும் அரசியல் செய்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது 
 
எஸ்பிபியின் இறுதி அஞ்சலிக்கு அஜித் ஏன் வரவில்லை? ரஜினி ஏன் வரவில்லை? கமல் ஏன் வரவில்லை? என யூட்யூபில் சகட்டுமேனிக்கு தங்கள் இஷ்டம்போல் வீடியோக்களை வெளியிட்டு தங்களுக்கு தாங்களே விளம்பரம் தேடிக் கொண்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து எஸ்பிபி சரண் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அஜித் இறுதி சடங்குக்கு வந்தாரா இல்லையா என்பது குறித்த பிரச்சினை இப்போது ஏன் எழுகிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவர் வரவேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது? அவர் எனக்கு நல்ல நண்பர் எனது அப்பாவுக்கும் நல்ல நண்பர் கண்டிப்பாக அவர் வீட்டிலிருந்து அப்பாவின் மரணத்திற்கு அவர் வருத்தப்பட்டிருப்பார், அஞ்சலி செலுத்தி இருப்பார் 
 
எனவே இந்த பிரச்சினையை தயவு செய்து பெரிதுபடுத்த வேண்டாம் என்று எஸ்பிபி சரண் அவர்கள் கூறியுள்ளார்