ஃபாலோ ஆன் ஆனது ஜிம்பாவே: வங்கதேசத்திற்கு இன்னிங்ஸ் வெற்றியா?

Last Modified செவ்வாய், 13 நவம்பர் 2018 (22:04 IST)
ஜிம்பாவே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்கா நகரில் கடந்த 11ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 522 ரன்கள் குவித்தது. முசாபிக் ரஹிம் இரட்டைச்சதமும், மொமினுல் ஹக் சதமும் அடித்தனர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாவே அணி இன்றைய ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 304 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஃபாலோ ஆன் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் 218 ரன்களுக்குள் ஜிம்பாவே அணியை வங்கதேச அணி சுருட்டிவிட்டால் அந்த அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :