ஐதராபாத் டெஸ்ட்: 72 ரன்களே இலக்கு: வெற்றியை நோக்கி இந்திய அணி

Last Modified ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (16:28 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 72 ரன்கள் மட்டுமே இலக்கு கொடுத்துள்ளதால் இந்திய அணியை வெற்றியை நெருங்கி வருகிறது.

நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இதனால் இந்திய அணி 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளதால் இன்றே வெற்றி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :