ஆசிய கோப்பையில் வங்கதேசம்: 20 ஓவர்களில் 116/0, 48.3 ஓவர்களில் ஆல்-அவுட்
இன்று துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதலில் அதிரடியாக விளையாடியது. 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 120 ரன்கள் எடுத்திருந்தது. எனவே இந்த அணி 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்கியது ஆட்டத்தின் போக்கை திடீரென மாறியது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஜாதவ் 2 விக்கெட்டுக்களையும் எடுத்த்தோடு இரண்டு ரன் - அவுட்டால் திருப்பம் ஏற்பட்டது. இறுதியில் வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தொடக்க ஆட்டக்காரர் லிடான் தாஸ் 121 ரன்களும், சர்கார் 33 ரன்களும், மெஹிடி ஹசன் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் 223 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.