செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (08:54 IST)

அவரிடம் இருந்து சிறப்பானவற்றைப் பெற வேண்டும் – பண்ட்டுக்கு ஆதரவாக யுவ்ராஜ் !

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில் அவரிடம் இருந்து சிறப்பானவற்றை பெறவேண்டும் என யுவ்ராஜ் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கவனம் ஈர்த்த ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது விளையாடி வருகிறார். தோனி தனது ஓய்வுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தோனியின் இடத்தைப் பிடிப்பார் என கூறப்பட்ட பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவது அவர் மேல் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் குரல்களும் எழுந்தன.
 
இந்நிலையில் பண்ட்டுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ’ரிஷப் பந்த்தின் திறமைகளை யாராவது வெளிக்கொணர வேண்டும். அவரை திட்டுவதோ அடக்குவதோ எந்த விதத்திலும் உதவாது. பயிற்சியாளரும் கேப்டனும்தான் அவரிடமிருந்து சிறப்பானவற்றை வெளியில் கொண்டுவர வேண்டும். இப்போதுள்ள இளம் வீரர்களுக்கு ஐபிஎல் மூலம் அதிக பணம் கிடைக்கிறது. அதனால் அவர்களுக்கு முக்கியமானது எது என நாம்தான் புரியவைக்கவேண்டும். 21 வயதில் இங்கிலாந்தில் அவர் இரண்டு டெஸ்ட் சதங்களை ரிஷப் பந்த் அடித்துள்ளார். அதனால் அவர் திறமை மேல் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி பெற வேண்டும் என்பதை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள்தான் உணர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்