ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:50 IST)

நான்காம் இடத்தில் பண்ட், ஸ்ரேயாஸ் இருவரும் இறங்கப்பார்த்தார்கள் – கோஹ்லி சொன்ன சுவாரஸ்யமான சம்பவம் !

நேற்று நடந்த பெங்களூர் டி 20 போட்டியில் பண்ட், ஸ்ரேஸாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் இறங்கப்பார்த்தார்கள் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

நேற்று பெங்களூருவில் நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் கோலி ருசிகரமான சம்பவம் ஒன்றைக் கூறினார். அதில் ’நான்காம் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர்தான் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் பண்ட் இறங்கிவிட்டார். 10 ஒவர்களுக்குள் 2 விக்கெட்டுகள் விழுந்தால் அய்யர்தான் இறங்க வேண்டும் என்பதே திட்டம். ஆனால் 8 ஓவர்களில் 63/2 என்ற நிலையில் இருக்கும்போது பண்ட் இறங்கிவிட்டார். இது மிஸ்கம்யுனிகேஷன் தான். நல்லவேளையாக இருவரும் களத்துக்கு வரவில்லை. ஒரே நேரத்தில் பிட்ச்சில் 3 பேட்ஸ்மென்கள்.’ எனக் கூறினார்.

ஆனால் இருவருமே சொதப்பலாக விளையாடி தோல்விக்குக் காரணமானார்கள்.