1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (19:07 IST)

கிருஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பரிசு அளித்த விராட் கோலி ! வைரல் வீடியோ

இந்திய கிர்க்கெட் அணி கேப்டன் விராட் கோலி கிருஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் வீடி யோ வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  விராட் கோலி உலகில் சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்படுகிறார்.
 
வரும் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, அவர் சிவப்பு நிற ஆடை, வெந்தாடி ம் புருவம் , மூக்கும் கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொண்டு கிருஸ்மஸ் தாத்தா போல் வேடம் அணிந்து கொண்டு, கொல்கத்தா மாநிலத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் திடீரென சென்றார்.
 
அங்குள்ள குழந்தைகள் அவரைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தனர். தான் கொண்டு சென்ற பரிசுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கி அவர்களுடம் அன்பை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.