புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (14:12 IST)

இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியல் ! ரஜினி, விஜய், கமல் இடம் பிடித்தனர்

வருடம் தோறும் இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின்  பட்டியல்  போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடுவது  வழக்கம். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும், பிரபல ஆங்கில இதழ் போர்ப்ஸ் இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
அதில்,இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டுவோரின் டாப்  பட்டியலில் ரூ. 252 கோடி வருமானம் ஈட்டி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
 
தற்போது ஓய்வில்  உள்ள கிரிக்கெட் வீரர் தோனி ரூ. 135.93 கோடி வருமானத்துடன்  5வது இடம் பிடித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவிம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 13 வது இடமும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 16 வது இடமும், விஜய் 47 வது இடமும், இயக்குநர் சங்கர் 55 வது இடமும், கமல்ஹாசன் 56 வது இடமும், தனுஷ் 64 வது இடமும், சிறுத்தை சிவா 80 வது இடமும், கார்த்திக் சுப்புராஜ் - 84 வது இடமும் பிடித்துள்ளனர்.
தங்கள் ஆஸ்தான நடிகர் இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களின் பட்டியலில் வந்துள்ளதால் அவர்களின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.