பாகிஸ்தான் vs இலங்கை டெஸ்ட் போட்டி: ஸ்கோர் விபரம்

Last Modified வெள்ளி, 20 டிசம்பர் 2019 (22:19 IST)
பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கராச்சி நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது
முன்னதாக இலங்கை அணி முதல் இன்னிங்சில் 271 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்த போட்டி முடிவுக்கு வருமா? அல்லது டிராவில் முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஸ்கோர் விபரம்:
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 191/10
59.3 ஓவர்கள்

ஆசாத் சபிக்: 63
பாபர் ஆசாம்: 60
அபித் அலி: 38

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 271/10
85.5 ஓவர்கள்

சண்டிமால்: 74
பெராரே: 48
டிசில்வா: 32
கருணரத்னே: 25
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 57/0 14 ஓவர்கள்

ஷான் மசூத்: 21 அவுட் இல்லை
அபித் அலி: 32 அவுட் இல்லை


இதில் மேலும் படிக்கவும் :