1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (09:07 IST)

இன்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்வது யார்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும், ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று பெங்களூரில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணியை இந்த தொடரை வெல்லும் அணி என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது 
 
பெங்களூர் மைதானத்திற்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கிலும், பும்ரா, சயினி, குல்தீப் யாதவ், ஷமி ஆகிய பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர் 
 
அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், பின்ச், ஸ்மித் மற்றும் ஜாம்பா, ரிச்ச்ர்ட்சன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்லும் அணி எது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்