செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 டிசம்பர் 2025 (10:57 IST)

கோலியின் கேப்டன்ஷிப்பில் கிடைத்தது தோல்விகளும் ஏமாற்றங்களும் தான்: ஹர்பஜன் சிங்

கோலியின் கேப்டன்ஷிப்பில் கிடைத்தது தோல்விகளும் ஏமாற்றங்களும் தான்: ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் வெள்ளைப்பந்து கேப்டன்சி குறித்து பல்வேறு கிரிக்கெட் வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 
 
ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், கோலியின் தலைமையில் இந்திய அணிக்கு மூன்று அல்லது நான்கு ஐசிசி கோப்பைகளை வெல்லும் திறன் இருந்தும், அதை சாதிக்காதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார். 
 
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, கோலியின் காலத்தை "அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த, ஆனால் இறுதியில் ஏமாற்றமளித்த ஒரு காலம்’ என்று விமர்சித்தார்.
 
2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விகளை சுட்டிக்காட்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி - கோலி கூட்டணியின் கீழ் நடந்த அணி தேர்வுகளே தோல்விக்கு முக்கியக் காரணம் என தெரிவித்தார். 
 
இருப்பினும், கோலியின் நண்பரான ஏபி டி வில்லியர்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கேப்டனை உலகக்கோப்பை வெற்றியை வைத்து மட்டுமே மதிப்பிடுவது தவறானது என்று அவர் வாதிட்டார். புள்ளிவிவரங்களின்படி, கோலி ஒருநாள் போட்டிகளில் 68% மற்றும் டி20 போட்டிகளில் 60% வெற்றி விகிதத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva