2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

Last Modified வெள்ளி, 17 ஜனவரி 2020 (22:00 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து 341 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையை எட்டியுள்ளது
ஸ்கோர் விவரம்:

இந்தியா: 340/6
50 ஓவர்கள்

தவான்: 96
கே.எல்.ராகுல்: 80
விராத் கோஹ்லி: 78
ரோஹித் சர்மா: 42

ஆஸ்திரேலியா: 304/10
49.1 ஓவர்கள்
ஸ்மித்: 98
லாபிசாஞ்சே: 46
பின்ச்: 33
ஆகார்: 25

ஆட்டநாயகன்: கே.எல்.ராகுல்

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி பெங்களூரில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும்


இதில் மேலும் படிக்கவும் :