தவான் போலவே செஞ்சுரியை மிஸ் செய்த ஸ்மித்: இலக்கை எட்டுமா ஆஸ்திரேலியா?

Last Modified வெள்ளி, 17 ஜனவரி 2020 (20:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 340 ரன்கள் எடுத்தது என்பதும் 341 என்ற இலக்கை நோக்கிய ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மிக அருமையாக விளையாடிய நிலையில் 98 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் போல்டாகி அவுட்டானார். 2 ரன்களில் இவர் சதத்தை மிஸ் செய்தது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது

முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது 96 ரன்களில் தவான் அவுட் ஆனார் என்பதும் 4 ரன்களில் அவர் சதத்தை மிஸ் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சதத்தை நெருங்கிய நிலையில் அவற்றை மிஸ் செய்தது இந்த போட்டியில் ஏமாற்றமாக கருதப்படுகிறது

இந்தநிலையில் 341 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 114 ரன்கள் என்ற இலக்கை 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :