ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (18:42 IST)

வார்னிங் கொடுத்தும் ஓடிய ஜடேஜா: அம்பயர் எடுத்த முடிவால் இந்தியாவுக்கு லாஸ்!

எச்சரிக்கை விடுத்தும் ஜடேஜா பந்து வீச்சு பிச்சில் ரன் ஓடியதால் இந்தியாவுக்கு 5 ரன்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளன.
 
போட்டியின் போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஜெல் ஸ்டார்க் வீசிய 48வது ஓவரின் 5 வது பந்தை ராகுல் அடித்து ரன் ஓடும் போது, அடுத்த முனையில் இருந்த ஜடேஜா பந்து வீச்சு பிச்சில் ஓடினார். இதனால் அம்பயர் இந்திய அணிக்கு 5 ரன்களை குறைத்து ஆஸ்திரேலிய அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கினார். 
 
இந்த தவறுக்கு முன்னர் தான் ஜடேஜா இதே போல பந்து வீச்சு பிச்சில் ஓடியதற்கு அம்பயர் வார்னிங் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.