திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (07:35 IST)

இந்திய தொடரில் கைகுலுக்க மாட்டோம் – மார்க் பவுச்சர் அறிவிப்பு !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலானப் போட்டியின் போது இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று இந்தியா வந்தடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் போது கிரிக்கெட்டின் பாரம்பர்யமான போட்டி முடிவடைந்த பின்னர் இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வதற்கு தென் ஆப்பிரிக்க அணி தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ‘கைகுலுக்குவதன் மூலம் கிருமிகள் பரவுவதாக சொல்லப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.