திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:03 IST)

மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர்களுக்கு கொரோனாவா?

நேற்று வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 34ஆக இருந்த நிலையில் இன்று கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் வந்த தகவலை அடுத்து கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் பேட்டி அளித்தார். அதில், ‘பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த  நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அரசிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய வெப்ப நிலையில் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது