புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (09:05 IST)

தகுதியை நிரூபித்த பாண்ட்யா; அணியில் தூக்கி போட்ட பிசிசிஐ!

நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்ட்யா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு தேர்வாகியுள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று இந்தியா வந்தடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ததால் நீண்டகாலமாக ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். இந்நிலையில் மும்பையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார் பாண்ட்யா. அதனால் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் பிசிசிஐ சேர்த்துள்ளது.

மேலும் தோள்பட்டை காயத்தால் விளையாடாமல் இருந்து ஷிகர் தவான் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட புவனேஷ்குமார் ஆகியோரும் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

அதேசமயம் இதுநாள் வரை அணியில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த கேதர் ஜாதவ், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் இந்த ஒருநாள் தொடர் பட்டியலில் இடம்பெறவில்லை.