கொரோனா வைரசால் இந்தியாவில் முதல் பலி? அதிர்ச்சி தகவல்
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவியது என்பது தெரிந்ததே இந்தியாவில் இதுவரை 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் என்பதும் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஈரான் நாட்டிலிருந்து சமீபத்தில் லடாக் திரும்பிய 76 வயது இந்தியர் ஒருவர் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் கொரோனா வைரஸால் பலியானதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறினாலும் அரசு இதனை உறுதி செய்யவில்லை. ஒருசிலர் இவர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார் என்று கூறுவதால் அவரது உடல் பரிசோதனைக்கு பின்னரே அவர் எதனால் இறந்தார் என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது
பரிசோதனை அந்த நபர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் கொரோனா வைரஸால் பலியான முதல் நபர் இவர்தான் என்பது உறுதியாகும்,.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க லடாக் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஏப்ரல் வரையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது