97 ரன்களில் 8 விக்கெட்டுக்கள்: கைநழுவும் கோப்பை கனவு!

கைநழுவும் கோப்பை கனவு!
Last Updated: ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:30 IST)
கைநழுவும் கோப்பை கனவு!
உலக கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் அடித்தது. அந்த அணியின் ஹீலே 75 ரன்களும், மோனே 78 ரன்களும் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 18 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே வந்ததில் தற்போது இந்திய அணி 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது

இன்னும் 12 பாலில் 88 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணிக்கு வெற்றி கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது. இதனால் இந்திய அணியின் கோப்பை கனவு தவிடுபொடி ஆகியிருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :