இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பம்!
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த தொடர் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது.
இரண்டரை ஆண்டுகளாக நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், நியுசிலாந்து அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இப்போது இரண்டாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் டெஸ்ட் போட்டி மூலம் தொடங்க உள்ளது. இதற்கான புள்ளிப்பட்டியல் மற்றும் அட்டவணை ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.