வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (12:36 IST)

நியாய விலைக் கடைகளில் மீண்டும் கைரேகை முறை!

நியாய விலைக் கடைகளி மீண்டும் கைரேகை முறை வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகம்  எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற நிலை உள்ளது. கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் வரிசையாக மக்கள் கைரேகை வைக்கும் போது அதன் மூலமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புண்டு என்பதால் தற்காலிகமாக அதை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் கைரேகை முறையே வர உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் பணி, ஆய்வுப்பணி, புதிய அட்டைகள் அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.