திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (17:39 IST)

நயன்தாரா பற்றி அவதூறு மீம்ஸ் பதிவு செய்திருக்கும் மேதகு இயக்குனர்!

சமீபத்தில் வெளியான மேதகு திரைப்படம் மூலமாக கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் தி கிட்டு.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது மேதகு. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குனர் தி கிட்டுவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தி கிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நயன்தாராவையும் அவரின் தனிப்பட்ட காதல் வாழ்க்கையும் இழிவு செய்யுமாறு உருவாக்கப்பட்ட மீம்ஸை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன்ஷாட்டை இப்போது பலரும் பகிர்ந்து அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.