1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Sara tendulkar became a model

மாடலிங் துறையில் கால்பதித்த சச்சினின் மகள்!

சச்சின்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் மாடலிங் துறையில் இறங்கியுள்ளார்.

சச்சின் அஞ்சலி தம்பதிகளின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர். இவர் லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் ஒரு மாடல் போல தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இப்போது உண்மையாகவே மாடலிங் துறையில் கால்பதித்துள்ளார்.

அஜியோ நிறுவனத்தின் ஆடைகளுக்கு மாடலாக அவர் போஸ் கொடுத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
சிறப்பான தொடக்கத்துக்குப் பின் தடுமாறும் ஆஸி பேட்ஸ்மேன்கள்!