செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (20:47 IST)

ஷமிக்கு ஆதரவு தெரிவித்த சச்சின்

ஷமிக்கு ஆதரவு தெரிவித்த சச்சின்
நேற்றைய உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி விளையாடியது குறித்து  பலரும் விமர்சித்து வரும் நிலையில் சச்சின் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டே இழக்காமல் 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்து வீசிய இந்திய பவுலர்களில் முகமது ஷமி அதிகபட்சமாக 4 ஓவர்களுக்குள் 43 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இதுகுறித்து அவரது அடையாளம் குறித்து பலரும் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷேவாக் ” ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது, முன்னாள் கிரிக்கெட் வீர்ர் சச்சின் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.