சிரஞ்சீவி படத்தில் பாடல் பாடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்!

Last Modified வியாழன், 14 அக்டோபர் 2021 (11:36 IST)

காட்பாதர் படத்தில் வரும் ஒரு பில்ட் அப் பாடலை பிரிட்னி ஸ்பியர்ஸ் பாட உள்ளாராம்.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

காடபாதர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் வரும் ஒரு பில்ட் அப் பாடலை பிரிட்னி ஸ்பியர்ஸை வைத்து பாட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை உலக அளவில் ட்ரண்ட் ஆக வேண்டும் என்பதால் இந்த முயற்சி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :