ஐபிஎல்-2021 ; சச்சின் மகனுக்கு நேர்ந்த சோகம்
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐபிஎல் 14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. ஆனால் இனிவரும் போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மும்பை அணி நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அர்ஜூன் டெண்டுல்கர் விலகியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.