1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (19:16 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட உள்ள நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்
 
இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் பெற்று உள்ளது, ராஜஸ்தான் அணியும் அதேபோல் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்று உள்ளது
 
இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் விளையாடும் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்
 
ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்