செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:13 IST)

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு கொரோனா!

சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் பணியாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகரான சென்னையில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பல கிளைகளை கொண்டு இயங்கும் சரவணா ஸ்டோர்ஸின் புரசைவாக்கம் கிளையில் பணிபுரிந்த 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களோடு பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.