சென்னை மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி!

muralidharan
சென்னை மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி!
siva| Last Updated: திங்கள், 19 ஏப்ரல் 2021 (07:04 IST)
இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை விரைவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது

முத்தையா முரளிதரனின் உறவினர்கள் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர்கள் அவ்வப்போது முத்தையா முரளிதரனை உடல்நிலை குறித்து விவரங்களை தெரிந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது
முத்தையா முரளிதரன் அவர்கள் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், கிரிக்கெட் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :