செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:42 IST)

சென்னையில் பண மழை - ரூ.36.53 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர். 
 
அந்த வகையில் சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.36.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் நாளை முதல் கடுமையாக கண்காணிக்கப்படும் என கூறியுள்ளது.