புரோ கபடி போட்டிகள்: பெங்களூரு, மும்பை அணிகள் வெற்றி

sivalingam| Last Modified புதன், 2 அக்டோபர் 2019 (22:20 IST)
புரோ கபடி போட்டிகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்றன

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை மற்றும் பாட்னா அணிகள் மோதின. இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடிய நிலையில் மும்பை 30 புள்ளிகளும், பாட்னா 26 புள்ளிகளும் பெற்றதால் மும்பை அணி 4 புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது

இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியும் அரியானா அணியும் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த பெங்களூரு அணி மிக அபாரமாக விளையாடி 59 புள்ளிகளைப் பெற்றது. பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய அரியானா அணியினரால் 36 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 23 வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டி பின்னர் டெல்லி, பெங்கால், ஹரியானா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 5 இடத்தில் இருந்த உபி அணி தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது


இதில் மேலும் படிக்கவும் :