திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (23:00 IST)

தமிழ் தலைவாஸ் அணிக்கு வெற்றியே கிடையாதா? இன்றும் தோல்வி!

புரோ கபடி போட்டிகள் தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் முதலே படு மோசமாக விளையாடி தொடர் தோல்விகளை பெற்று வருகிறது. இந்த அணி இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் தோல்வியடைந்து வெறும் மூன்றே மூன்று வெற்றியை மட்டும் பெற்று உள்ளது. மூன்று போட்டிகளை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புரோகபடி தொடரில் ஒரு அணி இவ்வளவு மோசமாக இதுவரை விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் கடும் வெறுப்பில் உள்ளனர்
 
 
இதனை அடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் டெல்லி அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பெங்கால் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பெங்கால் அணி 42 புள்ளிகளும் பெங்கால் அணி 33 புள்ளிகளும் எடுத்ததால் பெங்கால் அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
 
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் டெல்லி அணி முதலிடத்தில் தான் உள்ளது என்பதும் பெங்கால் அணியால் இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது