இன்று இறுதி போட்டி.. சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு? டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்?
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்ற உள்ளதால், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்துள்ளன.
நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை எந்த தோல்வியையும் சந்திக்காத இந்திய அணி, இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணி இதுவரை இந்தியாவிடம் மட்டுமே ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றியாளராக உயர இரு அணிகளும் தீவிரமாக செயல்பட இருக்கின்றன. டாஸ் முடிவும் இங்கு முக்கியமானதாக இருக்கும். டாஸில் வென்ற அணி முதலில் பேட்டிங் எடுத்தால், அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இரு அணிகளின் கேப்டன்களும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அதிகம்.
இந்திய அணியின் நீண்ட பேட்டிங் வரிசையும், உறுதியான பவுலிங் அணியின் வெற்றிக்கு சாதகமாக அமையும். ஆனால், நியூசிலாந்து அணி கூட சளைத்ததாக இல்லை. திறமையான வீரர்கள் கொண்டிருப்பதால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva