1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Suryakumar yadav feels proud about his catch in t 20 world cup final

செல்போனை எடுத்தாலே அந்த கேட்ச்தான்… நெகிழ்ச்சியாக பேசிய சூர்யகுமார் யாதவ்!

சூர்யகுமார் யாதவ் கேட்ச்
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்தது.

அவர் தலைமையில் இந்திய அணி வெற்றிநடைப் போட்டும் வருகிறது. இதற்கிடையில் சூர்யகுமார் யாதவ் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையில் தான் பிடித்த அபாரமான கேட்ச் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். அதில் “நான் செல்போனை பயன்படுத்தும் போதெல்லாம், அந்த கேட்ச்சைப் பார்த்து பெருமைப்படுகிறேன். அன்று என் நாட்டுக்கு சிறப்பான ஏதோ ஒன்றை செய்ததாக பெருமையாக உணர்கிறேன்.” என்க கூறியுள்ளார்.

டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மில்லர் தூக்கி அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டருகே லாவகமாக பிடித்தார். இந்த கேட்ச் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி தங்க பேட் பெறுவாரா கோலி…?