வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (07:35 IST)

17 வாக்குகள் வித்தியாசத்தில் மேயர் பதவியை பிடித்த பாஜக!

பெங்களூரு மாநகர மேயர் தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கவுதம் குமார் 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவர் பெங்களூரு நகரின் அடுத்த மேயராகிறார்.
 
 
பெங்களூரு மேயராக பதவிவகித்துவந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கங்காம்பிகேவின் பதவிக் காலம் சமீபத்தில் முடிவடைந்ததது. இதனையடுத்து புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கவுன்சிலர்கள், பெங்களூரு எல்லைக்குட்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் எம்.பி.க்கள் என மொத்தம் 257 பேர்கள் வாக்களித்தனர். 
 
 
மொத்தமுள்ள வாக்குகளில் பாதிக்கும் ஒரு வாக்கு அதிகம் பெற்றால் அதாவது 129 வாக்குகளைப் பெறும் வாக்காளர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டபோது பாஜகவைச் சேர்ந்த கவுதம் குமார் மேயராக தேவையான 129 வாக்குகளை மிகச்சரியாக பெற்று வெற்றிபெற்றார். இவரை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணா 112 வாக்குகள் பெற்றார். எனவே காங்கிரஸ் வேட்பாளரை விட 17 வாக்குகள் அதிகம் பெற்று பெங்களூரு நகரின் அடுத்த மேயராக கவுதம் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
 
 
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் ஆட்சி கவிழ்ந்து மாநில ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், இந்த மேயர் தேர்தல் வெற்றியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.