புரோ கபடி 2019: பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி

sivalingam| Last Modified வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (22:30 IST)
புரோ கபடி தொடரில் இன்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 35 புள்ளிகளும், மும்பை அணி 33 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்களூரு அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 51 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 31 புள்ளிகளும் எடுத்ததை அடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :