ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:18 IST)

சென்னை மெரினாவில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு.. குடும்பத்துடன் வருமாறு வேண்டுகோள்..!

சென்னை மெரினாவில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் இரண்டு இடங்களில் இந்த போட்டியை திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தா மாளிகைக்கு எதிரிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸ் பூத் அருகிலும் திரையிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது குடும்பத்துடன் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே லீக் போட்டிகளின் போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று இறுதிப் போட்டி என்பதால் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva