புரோ கபடி: பெங்கால் அணியை புரட்டி எடுத்த பாட்னா

Last Modified ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (23:40 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த தொடரில் 20 போட்டிகளுக்கும் மேல் விளையாடி வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்ற பாட்னா அணி இன்று நடைபெற்ற பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் ஆவேசம் அடைந்து அபார வெற்றி பெற்றது. பாட்னா அணி இன்றைய போட்டியில் 69 புள்ளிகளை குவித்தது. பெங்கால் அணி 41 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் பாட்னா அணி 28 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதனையடுத்து இன்று நடைபெற்ற அடுத்த போட்டியில் உபி அணி, புனே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் உபி அணி 43 புள்ளிகளும், புனே அணி 39 புள்ளிகளும் எடுத்தததை அடுத்து உபி அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டிக்கு பின் டெல்லி, பெங்கால், ஹரியானா, உபி, மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :