புரோ கபடி போட்டி: ஹரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

sivalingam| Last Modified வெள்ளி, 4 அக்டோபர் 2019 (23:10 IST)
புரோ கபடி போட்டித்தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஹரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி பெற்றன

முதலில் நடந்த ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் ஐந்து இடங்களில் ஒரு அணியாக இருக்கும் பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்பட்ட நிலையில் ஜெய்ப்பூர் அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஜெய்ப்பூர் அணி 41 புள்ளிகளும், பெங்களூரு அணி 34 புள்ளிகளும், எடுத்ததால் பெங்களூரு அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இதனையடுத்து நடைபெற்ற அடுத்த போட்டியில் ஹரியானா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹரியானா அணி 52 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 32 புள்ளிகளும், எடுத்ததால் ஹரியானா அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டிக்கு பின்னர் டெல்லி, பெங்கால், ஹரியானா, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :