வெள்ளத்தில் ரெட் ஹாட் போட்டோ ஷூட்; சர்ச்சையான வைரல் க்ளிக்ஸ்!!
பீகார் வெள்ளத்தில் மாணவி ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலானதோடு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், அம்மாநில தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக தாழ்வான பகுதிகளான பாகல்பூர் மற்றும் கைமூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் சூழ்ந்துள்ளது. இதுவரை மழை மற்றும் வெள்ளத்தால் 29 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீட்கப்படாத நிலையில், தேசிய பேரிட மீட்பு படையினர் மீட்புபணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாட்னா தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரியில் பயிலும் அதிதி சிங் என்னும் மாணவி சாலை வெள்ளத்தில் நின்று போட்டோ ஷீட் எடுத்துள்ளார்.
வெள்ள பாதித்துள்ள பல இடங்களில் நின்று போஸ் கொடுத்து அவர் நடத்திய போட்டோ ஷூட்டின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வைரலாகினார். ஆனால், இது அவருக்கு வினையாகவும் மாறிவிட்டது. பீகார் மக்களின் அவல நிலையை இது கிண்டல் செய்வது போல் உள்ளது என திட்டி வருகின்றனர்.
ஆனால், இந்த புகைப்படங்களை எடுத்த சவுரவ் அனுராஜ் என்பவர், இந்த போட்டோ சூட்டை மக்களின் கவனத்தை பீகார் வெள்ளத்தின் பக்கம் திருப்பவே எடுத்தோம். மற்ற மாநிலங்களில் வெள்ளம் வந்தால் உதவ மற்ற மாநிலங்கள் முன்வருகிறது. இது போல எங்கள் மாநிலத்திற்கு உதவி வேண்டும் என்பதற்காகதான் இவ்வாறு செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.