தொடர்புடைய செய்திகள்
- டி20 போட்டியில் முதல் விக்கெட்: நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
- நடராஜனை ஏலத்தில் எடுத்தது எப்படி? சேவாக் ருசிகரம்!
- இன்னைக்கும் சுமாரான ஆட்டம்தான்! 162 இலக்கு! – இந்தியாவை வீழ்த்துமா ஆஸ்திரேலியா!
- மாடுகளுக்கு கோட்: உத்தரப்பிரதேச பாஜக அரசு உத்தரவு
- இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி – ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு
முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த நட்டு – 3 விக்கெட்களைக் கைப்பற்றி அபாரம்!
இந்திய அணியில் தேர்வாகி உள்ள நடராஜன் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது முதல் டி 20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3.1 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
