இன்னைக்கும் சுமாரான ஆட்டம்தான்! 162 இலக்கு! – இந்தியாவை வீழ்த்துமா ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு 375 ரன்கள் இலக்கு: பதிலடி கொடுக்குமா?
Prasanth Karthick| Last Updated: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (15:58 IST)
இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா – இந்தியா முதல் டி20 போட்டியில் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான சுற்றுப்பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கமாக நடந்து முடித்த மூன்று சுற்றுகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று மூன்று சுற்றுகள் கொண்ட டி20 போட்டிகளின் முதல் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல், ஜடேஜா, சாம்சன் தவிர்த்து மீத அனைவரும் இன்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் 162 இலக்குகளை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அடுத்து பேட்டிங் இறங்க உள்ளார்கள். ஆஸ்திரேலியாவிற்கு இது மிகவும் குறைவான இலக்காகவே பார்க்கப்படுகிறது. எனினும் ரன்ரேட்டை குறைப்பது இந்திய பவுலர்கள் கையில்தான் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :